×

ஜார்க்கண்டில் எரித்து கொல்லப்பட்ட தமிழக மருத்துவ மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவி: குலாலர் சங்க தலைவர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனாவை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன். இவர், குலாலர் சமூகத்தை சேர்ந்தவர், கட்டிட தொழிலாளி. இவரது மகன் மதன்குமார் (28), எம்பிபிஎஸ் முடித்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரியில் தடயவியல் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் டாக்டர் மதன்குமார் தங்கி இருந்தார்.

இந்நிலையில் விடுதியின் பின்புறம் மதன்குமார் பாதி உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். விசாரணையில் கொலையாளிகள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அவர் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு முதல்வர் ஜார்க்கண்ட் முதல்வரை தொடர்பு கொண்டு உரிய நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மாணவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்.

The post ஜார்க்கண்டில் எரித்து கொல்லப்பட்ட தமிழக மருத்துவ மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவி: குலாலர் சங்க தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Jharkhand ,Kulalar Sangh ,Chennai ,State ,Tamil Nadu Pottery Workers ( ,Kulalar) Association ,Se. Narayanan ,Chief Secretary ,Chennai Secretariat ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...